எங்கும் தமிழ்...! எதிலும் தமிழ்...!

என் அன்னை தமிழுக்காக...! - வே.கணேஷ்(எ)கலாம்தாசன்

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

இந்தியனின் தூதுவன்..... (சந்திராயன் - Chandrayaan)

22 அக்டோபர் 2008 அன்று முழுவதும் இந்தியாவிலே உருவான 'சந்திராயன்', வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பொழுது எழுதிய வரிகள்......


'சந்திராயன்',இந்தியனின் தூதுவனாய்ச்,
சந்திரனுக்குச் சென்றிருக்கும்,

சரித்திர நாயகன் ...!!!


'சந்திராயன்',
பாரதத்தின் பெருமைதனை,

பல லட்சம் மைல் தாண்டி,

பறைசாற்ற போயிருக்கும்,
போராளி...!!!

'சந்திராயன்',

அழியாத வெண்ணிலவை,

ஆராயச் சென்றிருக்கும்,

அறிவார்ந்த தேசத்தின் மைந்தன்...!!!


'சந்திராயன்',
பெருமைமிகு பாரதத்தின்,

பெருமைதனை ஊரறிய,

உச்சியிலே பறந்து சென்று,

உலகினையே சுற்றி வந்து,

தட்டையாக மாறி தடம்
பதித்து நிற்பவன்...!!!

'சந்திராயன்',
மூவர்ணக் கொடியினை,

முழுமதியில் ஏற்றிடவே..

புவியிர்ப்பு விசை தாண்டி
புயலாய் புறப்பட்டவன்...!!!


'சந்திராயன்',

வற்றாத நதிகள் கொண்ட,

வளமான பாரதத்தில்,

பெற்றெடுத்த பிள்ளையிவன்,

பாரதத்தின் மன்னன்..!!!


இத்தனை பெருமைகளா...?!

இல்லை... இல்லை...

அத்துனையும் சொல்லவில்லை..!?

சொல்லியது ஒரு சில...

சொல்லாதது மிகப் பல....


ஒன்று சொல்வேன்....

உறுதியாய்..
இறுதியாய்...
இது வெறும் செயற்கைகோளன்று...

ஒவ்வொரு இந்தியனின் பெருமை....!!!!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

பின்பற்றுபவர்கள்

தமிழ்ப் பித்தர்கள்...

என்னைப் பற்றி

வே.கணேஷ் உலகத் தாய் பெற்றெடுத்த இந்தியத் தாயின் புதல்வன்.... நாவில் தமிழ்த் தாயின் திருப்பெயரை நாள்தோறும் உச்சரிக்கும் தமிழன்....! பெருமை மிகு வங்கியின் ஊழியன்...! பெரும் கனவோடும், கலை உணர்வோடும், கவிதை வரிகளோடும் வாழும் பித்தன்......

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

கவிதைகள்