எங்கும் தமிழ்...! எதிலும் தமிழ்...!

என் அன்னை தமிழுக்காக...! - வே.கணேஷ்(எ)கலாம்தாசன்

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

உன் கைக்குட்டை வேணுமடி எனக்கு! (O! Dear! Give me your kerchief please!!!)



மெய்யாய் நான் கண்ட கனவு.. கொஞ்சம் கற்பனையை கலந்திங்கே கவிதையாய்....




நான் ரசிக்கும் குறுந்தொகையே!
எனை ஈர்த்த சிறுநதியே!
மழலை போல் துயிலும் - என்
குழந்தைக் காதலியே!

இமை திற...!

பதறாதே..
நான் தான்.!

'இப்போது ஏன்?' என வியக்காதே..
விவரிக்கிறேன்.!

************************

'மலரென மகிழ்ந்து - உன்
கருவிழியை வண்டு நோக்கும்!' - என
உவமைகள் கூறி,
உவகையுற வரவில்லை!
பாவம்! வண்டுகளுக்கும் வேறு வேலை இருக்கும்!

நிலவையும் உன்னையும் கூட்டி,
ஒரு சேர ரசித்து,
'நிலவினும் அழகு நீயே!' என
இன்புறவும் விரும்பவில்லை!
இன்றாவது நிலவு ஓய்வெடுக்கட்டும்!

உன் கையோடு கையணைத்து,
கற்பனையில் மூழ்கி
களிப்புறும் உத்தேசமும் எனக்கு சுத்தமாயில்லை!

ஓ!
'பின் எதற்கு வந்தாய்?'
உன் விழிகளின் வினா
புரியாமல் இல்லை!

இனியவளே....
நான் வந்த நோக்கமே வேறு!

************************

நீ இல்லா நேரங்களில்,
உன்னோடு நான் இருக்க...
உன்னோடு நிதம் இருக்கும்,
உன் கைக்குட்டை வேணும் எனக்கு!

நான் தீண்டா உன்னை..
தினம் தீண்டித் தழுவும்,
உன் கைக்குட்டை வேணுமடி எனக்கு!

நான் ஒன்றும் புதியவன் அல்ல....
உன் பழைய கைக்குட்டையே கொடு!

உன்னோடு இருப்பதே பெருந்தகுதி என்றாலும்,
உன் பிரதியாய் நான் உணர,
முழுத்தகுதி வேணும் அதற்கு!

தகுதியா??!
தடுமாறதே!
ஒவ்வொன்றாய் உதிர்க்கிறேன்..
உள்ளத்தில் சூடு!

************************

உன் உதடுகளை
முன்னூறு முறையாவது அது
முத்தமிட்டிருக்க வேண்டும்!

நீ மடித்து மடித்து
சிறிதேனும் அது
சிறுத்திருக்க வேண்டும்!

எங்கேனும் தவறவிட்டு..
தேடித் தேடித் தவித்திருக்க வேண்டும்!

நீ ரசித்த மழையொன்றில்..
உன்னோடு தானும் சேர்ந்து,
இன்பமாய் அது நனைந்திருக்க வேண்டும்!

உனையன்றி வேறொருவர்..
விரல் கூட அதை
வருடாதிருந்திருக்க வேண்டும்!

ஒளி வீசும் உன் விழியில்
நீர் பெருக கண்டிட்டால்...
அனிச்சையாய் அதை அணுகி,
உன் கைக்கு முன்னால்
கண்ணீர் கழுவியிருக்க வேண்டும்!

உன் ஆடைகளை அணைத்துக் கொண்டே..
வெயில் காய்ந்திருக்க வேண்டும்!

உனையோத்த பூ ஒன்று, செயற்கையாய்
அதில் பூத்திருக்க வேண்டும்!

உன்னின் ஸ்பரிசம் அதில்
எங்கெங்கும் பரவியிருக்க வேண்டும்!

அழகான நாள் ஒன்றில்
உன் கண்ணில் அதை அணிந்து,
மழலையாய் மாறி..
நீ கண்ணாம்பூச்சி ஆடியிருக்க வேண்டும்!

நீ பொழிந்த மழையில்
குளித்திருக்க வேண்டும்!

அதன் மேனி முழுவதும்..
உந்தன் வாசம் வீச வேண்டும்!

ஏன் சிரிக்கிறாய்!?
"காதலா! கைக்குட்டைகே இத்தனை கட்டளையா?"
என்றா?

என்ன செய்ய?
நீ விடும் மூச்சைக் கூட,
இசையென ரசிக்கும் இந்த
மடக்கவிஞன்,
கைக்குட்டையையா விட்டு வைப்பான்?

இது போன்ற
கைக்குட்டை ஒன்றில்..
ஆயிரம் முத்தங்களுடன்.. உன்னின்
அத்தனை காதலையும் சேர்த்து
கவிதை போல் கோர்த்து,
கண்மூடி காத்திரு....!

கனவில் வருகிறேன்!!!!

எங்கே....
இப்போது இமை மூடு..!

3 கருத்துகள்:

உன் நட்பை நேசிக்கும் ஓர் இதயம்!.. 23 அக்., 2012, PM 6:52:00  

உன்னோடு இருப்பதே பெருந்தகுதி என்றாலும்,
உன் பிரதியாய் நான் உணர,
முழுத்தகுதி வேணும் அதற்கு!


நண்பா!!..தகுதி உனக்கு வேண்டுமா - இல்லை
உன்னோடு இருக்க தகுதி கைக்குட்டைக்கு வேண்டுமா!!!!!....

கைக்குட்டைக்கு தகுதி வேண்டும் என்பதே உண்மை ...

Rev Info Tech 24 அக்., 2012, AM 8:23:00  

என்னவளோடு இருப்பதே அந்த கைக்குட்டைக்கு பெரிய தகுதி தான்... ஆனால், அவளின் பிரதியாய் அக்கைகுட்டையை நான் உணர்வதற்கு.. அதற்கு வேறு பல தகுதிகளும் வேண்டும்... என பொருள் நண்ப!

உன் நட்பை நேசிக்கும் ஓர் இதயம்!.. 24 அக்., 2012, PM 6:52:00  

என் ஒரு நிமிட மனத்தடுமாற்றத்தினால் தவறாக எண்ணிவிட்டேன் ....
மன்னிக்கவும் தோழனே .....

கருத்துரையிடுக

இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

பின்பற்றுபவர்கள்

தமிழ்ப் பித்தர்கள்...

என்னைப் பற்றி

வே.கணேஷ் உலகத் தாய் பெற்றெடுத்த இந்தியத் தாயின் புதல்வன்.... நாவில் தமிழ்த் தாயின் திருப்பெயரை நாள்தோறும் உச்சரிக்கும் தமிழன்....! பெருமை மிகு வங்கியின் ஊழியன்...! பெரும் கனவோடும், கலை உணர்வோடும், கவிதை வரிகளோடும் வாழும் பித்தன்......

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

கவிதைகள்