எங்கும் தமிழ்...! எதிலும் தமிழ்...!

என் அன்னை தமிழுக்காக...! - வே.கணேஷ்(எ)கலாம்தாசன்

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

வாருங்கள் நிலவுக்குச் செல்வோம்..!! (Let's reach the Moon!)



வட்டநிலவு நம்

வருகைக்காய் காத்திருக்கிறது,
வான்வெளி வழிகூட
வரவேற்று நிற்கிறது!!
வாருங்கள் நிலவுக்குச் செல்வோம்..!!

கனிமங்கள் பல கொண்ட,
கவின் நிலவின் கரம் பிடிக்க,
கடல் கூட துடிக்கிறது!
கரை தாண்ட நினைக்கிறது!!
வாருங்கள் நிலவுக்குச் செல்வோம்..!!

முழுமதியின் மயக்கத்தினில்,
மூழ்கிவிட்ட பறவைகளோ,
முத்தமிட முயல்கிறது..
முடியாமல் தவிக்கிறது!!
வாருங்கள் நிலவுக்குச் செல்வோம்..!!

பால் போல மின்னும்!
பாரெல்லாம் பவனி வரும்!
பகலவனை பிரதிபலிக்கும்!
பார்வைக்கு ஒளிதரும்!
வாருங்கள் நிலவுக்குச் செல்வோம்..!!

கவிஞர்க்கு உவமையாய்,
காதலுக்கு தூதாய்,,
அறிஞர்க்கு பெட்டகமாய்,
பக்தர்க்கு பகவானாய்,
குழந்தைக்கு கற்பனையாய்,
இரவிற்கு ஒளியாய்,
எத்தனையோ உரு கொள்ளும்!
எப்போதும் மனம் துள்ளும்!!


எத்தனயோ சிறப்பு உண்டு,
அத்தனைக்கும் நேரமில்லை..!
எனவே,
கற்பனை சிறகை விரித்தெழுவோம்.!
கவலையின்றி பறந்திடுவோம்!!
வாருங்கள் நிலவுக்குச் செல்வோம்..!!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

பின்பற்றுபவர்கள்

தமிழ்ப் பித்தர்கள்...

என்னைப் பற்றி

வே.கணேஷ் உலகத் தாய் பெற்றெடுத்த இந்தியத் தாயின் புதல்வன்.... நாவில் தமிழ்த் தாயின் திருப்பெயரை நாள்தோறும் உச்சரிக்கும் தமிழன்....! பெருமை மிகு வங்கியின் ஊழியன்...! பெரும் கனவோடும், கலை உணர்வோடும், கவிதை வரிகளோடும் வாழும் பித்தன்......

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

கவிதைகள்